சுவிட்சர்லாந்தில் பரபரப்பை கிளப்பிய 13 தமிழர்கள் மீதான நீதிவிசாரணை!

சுவிட்சர்லாந்து நீதித்துறை வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மிகப்பெரிய வழக்காக கருதப்படும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் 13 உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.

625.183.560.350.160.300.053.800.330.160.90குறித்த 13 நபர்களும் சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழர்களிடம் இருந்து சுமார் 15 மில்லியன் பிராங்க்ஸ் திரட்டியுள்ளதாகவும், குறித்த தொகையை மிரட்டியும் மோசடி செய்தும் சேகரித்துள்ளதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் மட்டும் இலங்கைத்தமிழர்கள் சுமார் 50,000 பேர் குடியிருந்து வருகின்றனர். இவர்களே தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு முக்கிய பொருளாதார மையமாகவும் இருந்துள்ளதாக சுவிஸ் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு சுவிட்சர்லாந்தில் தடைவிதிக்கப்படவில்லை என்றபோதும் Bellinzona நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் அரசின் முடிவுக்கு மாற்றம் வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.