ஒரு சிலருக்கு வயது அதிகமாகியும் திருமணம் கைகூடி வந்திருக்காது. அவர்களுக்கு முன்னோர்கள் சாபத்தினால் தடை ஏற்படுகிறது என்று சொல்வர். ஒரு சிலருக்கு குடும்பத்துடன் ஆரோக்கியப் பாதிப்புகள் வந்து கொண்டேயிருக்கும். யாருடைய சாபமோ என்று சொல்வர். ஒரு சிலருக்கு கோபம் வந்தால் உடனே சாபம் விடுவர். நமது ஜாதகப்படி ஆராய்ந்து பார்த்து எந்த விதமான சாபம் உள்ளதோ அதற்கேற்ற வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
சாபங்கள் மொத்தம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது. அவை என்ன, அந்த சாபத்தால் என்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
- பெண் சாபம் – பெண்களை ஏமாற்றுவதும், உடன் பிறந்த சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பது, மனைவியை விட்டு விலக நினைப்பது போன்ற காரணங்களால் பெண் சாபம் ஏற்படுகிறது. பெண் சாபத்தினால் வம்சம் அழியும்.
- பிரேத சாபம் – இறந்த ஒருவரை பற்றி இழிவாக பேசுவதாலும், அவரின் உடலை தாண்டி செல்வதாலும், இறுதிகாரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும் மற்றும் இறந்தவரின் உறவினரை பார்க்க அணுமதிக்காமல் தடுப்பது போன்ற காரணங்களால் பிரேத சாபம் நிலைக்கும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.
- பிரம்ம சாபம் – கல்வியை போதித்த ஆசானை மறப்பது, கற்றதை தவறாக பயன்படுத்துவது, பிறருக்கு கற்றுதராமல் மறைப்பது போன்றவற்றால் பிரம்ம சாபம் ஏற்படும். பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் என்ற கல்வியை கற்க முடியாத நிலை ஏற்படும்.
- சர்ப்ப சாபம் – எந்த தீங்கும் செய்யாத பாம்பினை கொல்வது, துண்புருத்துவது, பாம்பின் புற்றினை அழிப்பது போன்றவற்றினால் சர்ப்ப சாபம் ஏற்படும். இதனால் திருமண தடையும்.
- பித்ரு சாபம் – நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி, தர்ம காரியங்கள் போன்றவற்றை செய்யாமல் மறைப்பது, தாய், தந்தை, தாத்தா, பாட்டி போன்றோரை மதிக்காமல் இருப்பது, பராமரிக்காமல் இருப்பது போன்றவைகளால் பித்ரு சாபம் நிலைக்கும். இதானால் குழந்தை இறப்பது, ஆண் வாரிசு பிறக்காமல் போவது என நடக்க நேரிடும்.
- கோ சாபம் – பால் தராத பசுவினை வெட்ட நினைப்பது, பசுவை துண்புருத்துவது, தாயுடன் கன்றுவை பிரிப்பது, தண்ணீர் கொடுக்காமல் தவிக்கவிடுவது போன்றவை நடந்தால் குடுப்பத்தின் வம்சத்தில் எந்தவித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.
- பூமி சாபம் – பூமியினை காலால் உதைப்பது, ப்ளாஸ்டிக் பொருட்களை புதைப்பது, பள்ளங்கள் வீணாக தோண்டுவது, அடுத்தவரின் நிலத்தினை பரிப்பது போன்றவை பூமி சாபம் நடக்கும். இதனால் நரக வேதனையை கொடுக்கும்.
- கங்கா சாபம் – பிறர் குடிக்க நினைக்கும் தண்ணீரை தடுப்பது, நதியை அசுத்தம் செய்வதால் கங்கா சாபம் ஏற்படும். இதனால் நிலத்தில் தண்ணீர் கிடைக்காமல் கஷ்டத்தை தரும்.
- விருட்ச சாபம் – பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை அழித்து வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். கடன் மற்றும் நோய் உண்டாகும்.
- தேவ சாபம் – பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால் தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.
- ரிஷி சாபம் – கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களை, பக்தர்களை அவமதிப்பது போன்ற காரணங்களால் நடக்கும். வம்சம் அழியும் நிலை வரும்.
- முனி சாபம் – எல்லை தெய்வங்கள். சிறிய தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதை, பூஜை ஆகியவற்றினை தடுப்பது, மறப்பது போன்றவைகளால் முனி சாபம் ஏற்படும். இதனால் செய்வினை கோளாறுகள் ஏற்படும்.
- குலதெய்வ சாபம் – நம் முன்னோர்கல் தெய்வங்களாக கொண்டு பூஜித்து வந்ததை மறப்பது, குலதெய்வ சாபத்தினால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்காமல் போகும். துன்பமே சூழ்ந்து கொள்ளும்.
சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும். தீயவர்களை அழிக்கும். எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது. ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் அழித்து விடும்.