ஜெனிலியாவுக்கு இப்படியொரு சோதனையா..? அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!

பாய்ஸ் படத்தில் இயக்குனர் ஷங்கரால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டவர் ஜெனிலியா. இதனை அடுத்து அவருக்கு பல தெலுங்கு பட வாய்ப்புகள் வந்தது.

பின்னர் தமிழில் விஜயுடன் சச்சின் படத்தில் நடித்தார். இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் ஜெயம் ரவியுடன் நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம்தான் பெரும் புகழை பெற்று தந்தது.

அந்த படத்தில் அவர் நடித்த ஹாசினி கேரக்டரில் துடுக்குத்தனமாக கேரக்டர் வெகு பிரபலம். அதன்பிறகு பிசியாக பல மொழிகளிலும் இடைவிடாது நடித்து கொண்டிருந்தார்.


பிசியாக நடித்து கொண்டிருந்த காலக்கட்டத்திலேயே 2012 பிப்ரவரி மாதம் தனது காதல் ரித்திஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார்.

2014ல் அவருக்கு முதல் குழந்தை ரியான் பிறந்தது. 2016ல் அடுத்த குழந்தை பிறந்தது. தனது கணவரான ரித்திஷ் தேஷ்முக்குடன் 2003ம் ஆண்டு இந்தி படத்தில் சேர்ந்து நடித்தார். அப்போது முதலே இருவரும் காதலித்து வந்தனர்.

முதலில் இதனை மறுத்தாலும், பின்னர் ஜெனிலியா ஒப்பு கொண்டார். இரண்டு குழந்தைகள பிறந்த பின்னரும் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. சில இந்தி படங்களில் கவுரவ வேடங்களில் நடித்து உள்ளார்.