சுவிட்சர்லாந்து பனிச்சரிவில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை கணவருடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
’ஹேட் ஸ்டோரி’ புகழ் பவுலி டேம் என்ற நடிகை, நீண்ட நாட்களாக காதலித்து வந்த அர்ஜுன் டெப் என்னும் நபரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பின் தேன்நிலவு சுற்றுலாவாக சுவிட்சர்லாந்து சென்றிருந்த தம்பதியினர், அங்கு பொழிந்து வரலாறு காணாத பனிப்பொழிவில் கடுமையாக சிக்கியுள்ளனர்.
இவர்கள் தங்கியிருந்த Matterhorn பகுதிக்கு அருகே பனிப்பொழிவு கடுமையாக இருந்துள்ளது.
அவரைப் போல் பல சுற்றுலா பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியதால், போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் ஹெலிகாப்டர் உதவியுடன் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் சிக்கிய சுற்றுலா பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.