மட்டக்களப்பு – மண்டூர் பொலிஸ் பிரிவில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலே பலியானார்.
மதுவரித் திணைக்களத்தில் கடமைபுரியும் ஒரு வயதுக் குழந்தையின் தந்தையான கிருஷ்ணப்பிள்ளை வாசன் (33) என்பவரே இவ் விபத்தில் பலியானார் என மண்டூர் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுணதீவு இலுப்படிச்சேனையிலிருந்து மோட்டார் சைக்கிலில், அம்பாறைக்கு கடமைக்காக சென்றவேளையில் மண்டூர் வீதியில் வைத்து பஸ்வண்டியில் மோதுண்டதில் இவர் ஸ்தலத்திலே பலியானார்.
இவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், குறித்த விபத்துத் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.