இந்தியா பெண்கள் அணி தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான…..

Capturegfyfvjgbjதென்னாபிரிக்கா அணிக்கு எதிரான இந்தியா பெண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா பெண்கள் அணி எதிர்வரும் பெப்ரவரி மாதம் தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஓடி தொடரிலும் 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரிலும் விளையாடவுள்ளது. அதனடிப்படையில் முதலாவது ஓடி போட்டி பெப்ரவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கடந்த ஆண்டு ஜீலை மாதம் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்தியா பெண்கள் அணி இங்கிலாந்து பெண்கள் அணியிடம் தோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில் தென்னாபிரிக்கா அணியுடனான ஒருநாள் தொடர் அணியில் மிதாலிராஜ் (அணித்தலைவர்), ஹர்மன்பிரீத் கவுர் (உபதலைவர்), சுஷ்மா வர்மா (விக்கெட் கீப்பர்), எக்தா பிஸ்த், ஸ்மித்ரி மந்தனா, பூனம் யாதவ், பூனம் ரவுத், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஜூலன் கோஸ்வாமி, தீப்தி ஷர்மா, ஷிகா பாண்டே, மோனா மேஷ்ரம், பூஜா வஸ்ட்ராகர், வேதா கிருஷ்ணமூர்த்தி, தானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.