இன்றைய ராசிபலன்(12/1/2018)

  • மேஷம்

    மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டிவரும். சிலர் உங்களை குறைக்கூறினாலும் அதைப்பெரிதாக்க வேண்டாம். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத்தேடி வருவார். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

  • கடகம்

    கடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனப்பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். பழைய கடனைத்தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

  • கன்னி

    கன்னி: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.

  • துலாம்

    துலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பணவரவு திருப்தி தரும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் கோபத்தைகாட்டாதீர்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

  • தனுசு

    தனுசு: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். சகோதர வகையில் செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரியிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

  • மகரம்

    மகரம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: உணர்ச்சி பூர்வமாகப் பேசுவதைவிட்டு அறிவு பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். சாதிக்கும் நாள்.

  • மீனம்

    மீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.