பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவால் இந்தியா துண்டாடப் படுமோ என்று திரைப்பட இயக்குனர் பாரதி ராஜா அச்சம் வெளியிட்டு இருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் திடுக்கிடும் தகவல் ஒன்றை தனது முகநூலில் பதிவு செய்து இருக்கிறார் எச்.ராஜா.
இது குறித்து அவர் கூறுகையில்,
ஒவைசி அவர்கள் 15 நிமிடம் ராணுவத்தை நீக்குங்கள் .80% இந்துக்களை கொன்று குவிப்பேன் என்று சொன்ன போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை
அஜ்மல் கசாப்,அப்சல் குரு போன்றவர்கள் இந்தியாவில் தீவிரவாத சம்பவங்களை அரங்கேற்றிய போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை.
ராமர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை
காஷ்மீரில் பல இந்துக்கோவில் இடிக்கப்பட்ட போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பண்டிட்கள் விரட்ட பட்ட போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை
வங்கதேச அகதிகள் அஸ்ஸாம் மாநிலத்தில் பூர்விக போடோ குடிமக்களை விரட்டிய போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை.
காங்கிரஸ் கட்சி மதக்கலவர தடுப்பு மசோதா கொண்டு வர முயற்சித்த போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை
கேரளாவில் லவ் ஜிஹாத் நடக்கும் போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை
எல்லையில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் மிருகங்களால் கொல்லப்பட்டும் போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை.
அப்போது எல்லாம் ஜடம் போல் இருந்த பாரதி ராஜா அவர்கள் இப்போது வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பதேன்” என்று காட்டமாக தெரிவித்து உள்ளார்.