பஞ்சாங்கத்தில் கணித்த படியே ஆந்திராவில் புதையல் கிடைத்துள்ளதால், தமிழகத்தில் புதையல் கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2018-ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் நல்ல மழை பொழியும். காய்கறிகள் விலை வீழ்ச்சியடையும், மா, பலா, தென்னை அதிக அளவில் விளையும், தேங்காய் விலை வீழ்ச்சியடையும் என்று விளம்பி வருடத்திய பஞ்சாங்கம் கணித்துள்ளது.
ஆடி முதல் கார்த்திகை மாதம் வரை நல்ல மழை பெய்யும், வடக்கே காசி, கயா, அயோத்தியிலும், தெற்கே ராமேஸ்வரம், திருநெல்வேலி, திருச்சி, மதுரையிலும் நில நடுக்கம் ஏற்படும். தமிழக நதிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும், அணைகள் நிரம்பி வழியும்.
தென்மேற்கு பருமழை காலமான ஆடி, ஆவணி மாதத்தில் பகல், இரவில் எல்லா இடங்களிலும் மழைபொழியும் விமானம், இரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும்.
மும்பை, கொல்கத்தா அதிகம் பாதிப்பு ஏற்படும். தமிழகத்தில் மழை பிரதேசங்களில் நல்ல மழை பெய்யும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.
நடிப்புத்துறையில் பேரும் புகழும் வாங்கிய ஒரு நடிகர் புதிய அரசியல் கட்சி தொடங்குவார். அவரால் பல மாற்றங்கள் ஏற்படும் என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது
மாநில அரசு நிலையில்லாத அரசாக நடைபெறும். வங்கிகளில் மாற்றம் ஏற்படும். மத்திய அரசு புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு வெளியிடும் என்று கணித்துள்ளது.
அதே போல ஜூலை மாதம் பூமிகாரகன் செவ்வாய் சேர்ந்து இருப்பதால் பூமியில் அரசாங்கத்தில் பலகோடியில் புதையல் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கணித்துள்ளது.
தமிழ் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ள புதையல் ஆந்திராவில் வைர மலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜூலை மாதம் தமிழ்நாட்டில் புதையல் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.