மாதத்திற்கு 1 கோடிக்கு மேல் சம்பாதித்த பிச்சைக்காரன்: எச்சரிக்கை!

துபாயில் சுற்றுலா விசாவில் வருபவர்கள் குறிப்பிட்ட காலம் முடிந்த பின்பும் சட்ட விரோதமாக தங்கி வருவதாகவும், பிச்சை எடுத்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90துபாய்க்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் அந்நாட்டிலே தெரு ஓரங்களில் கடைகளை போட்டு விடுவதாகவும், அங்கு விற்கப்படும் பொருட்கள் எதையும் வாங்கி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டாம் என்று பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து துபாய் பொலிசார் கூறுகையில், நாட்டில் இருக்கும் பெரும்பால தெருவோர கடைகள் வைத்திருப்பவர்கள் அனைவரும் சுற்றுலா மற்றும் தொழில் தொடர்பான விசாவில் வந்திருப்பவர்கள்.

அனைவரும் தங்களுடைய காலம் முடிந்த பின்பும், இங்கு கடைகளை வைத்துக் கொண்டு அதன் மூலம் வரும் வருவாய் மூலம் சம்பாதித்து வருகின்றனர்.

மேலும் அவர்கள் விசாக்கள் அனைத்தையும் வாங்கிப் பார்த்தால் மூன்று மாதங்கள் மட்டுமே நாட்டில் தங்குவதற்கு அனுமதி இருக்கிறது.

இதனால் இது போன்று இருக்கும் கடைகளில் பொருட்களை வாங்கி ஏமாற வேண்டாம் என்றும் அவர்கள் விற்கும் பொருட்கள் தரமற்றவை என்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி அது போன்ற கடைகளில் இருப்பவர்கள் ஏதேனும் குற்றங்கள் செய்துவிட்டால் அவர்களை பிடிப்பது சிரமாக இருக்கிறது.

ஏனெனில் இது போன்ற திடீர் திடீர் சிறிய கடைகளில் ஒரு கைரேகையோ, அவர்கள் தொடர்பான விவரங்கள் இருப்பதில்லை. இதனால் நாமலே அவர்களிடம் பொருட்களை வாங்கினால் ஊக்கப்படுத்துவதை போன்று இருக்கும்.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் அங்கு பொருட்கள் வாங்கினால், அந்த பொருட்கள் தரமற்றது என்றவுடன் இங்கு அவர்கள் எந்தப் பொருட்களையும் வாங்க தயங்குவார்கள்.

கடந்த 2017-ஆம் ஆண்டு இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டது போது 34,881 தெருவோர கடை வைத்திருப்பவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் சட்ட விரோதமாக தங்கியுள்ளனர். இதற்கு முன்னர் ஆண்டு 49,205 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த இரண்டு ஆண்டுகளில் கைது செய்யப்பட்டவர்களில் 1,840 பேர் பிச்சைக்காரர்கள், அதுமட்டுமின்றி கடந்த 2016-ஆம் ஆண்டு ஒரு பிச்சைக்காரரை கைது செய்த போது, மூன்று மாதம் சுற்றுலா விசாவில் வந்தவர் என்பது தெரியவந்தது.

அதுமட்டுமின்றி அவர் மாதம் ஒன்றிற்கு 55,000 பவுண்ட் அதாவது இலங்கை மதிப்பில் 1,14,47,462 கோடி, குறிப்பாக வெள்ளிக் கிழமைகளில் மசூதி முன்பு நின்று பிச்சையெடுத்துள்ளான்.

இதனால் இது போன்று பிச்சைக்காரர்களையும் காசு கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டாம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.