நடிகை மீனா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்தவர். அஜித், விஜய் என பல நடிகர்களுக்கு ஹீரோயினாக நடித்தவர்.nதிருமணமாகி பின் குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். அவரது மகள் நைனிகா தெறி படத்தின் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் நடிகை மீனா மலையான சினிமா பக்கம் எண்ட்ரி கொடுத்திருந்தார். எனினும், தமிழ் படங்களில் நடிப்பது பற்றி எந்த தகவலும் வெளியாக வில்லை.
தென்னிந்திய திரைப்பட நடிகை மீனா செப்டம்பர் 16 1976 சென்னையில் பிறந்தார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் அறியப்பெற்ற நடிகை ஆனார். இவரது முதல் திரைப்படம் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படமாகும். 90களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக வலம்வந்த். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக நடித்து வெளியான முத்து திரைப்படம், ஜப்பானில் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து ஜப்பான் நாட்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை நிறுத்தியிருந்தார். பின்னர் மலையான சினிமா பக்கம் எண்ட்ரி கொடுத்திருந்தார்.
எனினும்,தமிழ் படங்களில் அவரை காண முடியாதமையால் தமிழ் ரசிகர்கள் கொஞ்சம் கவலையில் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை நிறுத்தியிருந்த நடிகைகள் தற்போது சினிமா பக்கம் எண்ட்ரி கொடுத்தாலும் தமிழ் படங்களில் காண்பது அரிது என்பதும் குறிப்பிடத்தக்கது.