லட்சக் கணக்கில் ரசிகர்களை வைத்துள்ளவர் நடிகர் சூர்யா.அஜித் விஜய் என பல நடிகர்களுக்கு ரசிகர்கள் இருந்தாலும், சூர்யாவுக்கு என ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
தற்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில்,சூர்யா நடித்து வெளிவரவுள்ள படம் தானே சேர்ந்த கூட்டம்…இந்த படம் திரைக்கு வர உள்ளது.
இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்,சூர்யா ரசிகர்கள் உற்சாகமாக கலந்துக் கொண்டனர்.
அப்போது, சூர்யாவை பார்த்த ரசிகர்கள் ஓடி போய் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளனர்.
ரசிகர்கள் தன் காலில்,விழுந்து ஆசிர்வாதம் வாங்க வருவதை பார்த்த ,நடிகர் சூர்யா இமைப்பொழுதில்,ரசிகர் காலில் விழுந்து,தயவு செய்து இது போன்று காலில் விழுந்து வணங்குவதை விட்டுவிடுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனை பார்த்த மற்ற ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் ரசிகர்கள் காலில் விழுவதை விட்டுவிட்டு அமைதியான முறையில், ஜாலியாக உற்சாகத்துடன் சூர்யாவுடன் போட்டோ எடுத்துள்ளனர்.