கடந்த சில நாட்களாக ஓவியா மற்றும் சிம்பு இரகசிய திருமணம் என்ற வதந்திகள் பரவி புகைப்படங்களும் வெளிவந்தன.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உண்மையான புகைப்படங்களை மறுதினமே இணையவாசிகள் வெளியிட்டிருந்தனர். அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்றும் அது நயன் மற்றும் சிம்பு ஒரு படப்பிடிப்பில் எடுத்த புகைப்படம் என்றும் ஆதாரத்துடன் வெளியாகியது.
இன்றைய தினம் இது தொடர்பில் மற்றும் ஒரு சூடான செய்தி வைரலாகி வருகின்றது.
பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் டிவியில் அழகிய ஓவியா நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. ஓவியாவை மீண்டும் விஜய் டிவியில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இதில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.
இதன் போது, ஓவியா காதல் அழகான ஒன்று என்றும் எனக்குள்ளும் சிம்பு.. சிம்பு என்று சொல்லுவதாக கூறியுள்ளார்.இதேவேளை, சிம்புவிற்கும் தொலைப்பேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தனக்கும், ஓவியாவுக்கும் திருமணமாகிவிட்டதாக நடிகர் சிம்பு நகைச்சுவையாக கூறியுள்ளார்.