சாலையில் நடந்து சென்றவரை வழிமறித்த இருவர் கொட்டன்களாலும் கைகளாலும் சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நுணாவில் கனகன்புளியடிச் சாலை மட்டுவிலில் இடம்பெற்றுள்ளது.
மட்டுவில் மத்தியைச் சேர்ந்த இளைஞர் பொங்கலுக்காக கொழும்பிலிருந்து வந்துள்ளார்.
அவர் நுணாவில் சந்தியில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்ற வேளையில் அவரைக் கடந்து சென்ற மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் திரும்பி வந்து கொட்டன்களாலும் , கைகளாலும் சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.