பெற்ற தாயும், அவளது ஆண் நண்பரும் சேர்ந்து ஒரு சிறுவனை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய சம்பவம் ஜேர்மனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனின் 47 வயதான தாயும் 37 வயதான அவளது ஆண் நண்பரும் சிறுவனை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதோடு பணத்திற்காக பல ஆண்களின் பாலியல் இச்சைகளுக்கு அவனை இரையாக்கியுள்ளனர்.
இந்த கொடூர தம்பதி ஜேர்மனியின், Baden-Württemberg மாகாணத்திலுள்ள Freiburg நகரத்தில் வசிக்கிறார்கள்.
Baden-Württemberg மாகாணத்தின் வரலாற்றிலேயே இத்தகைய கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
சிறுவன் காவல்துறையால் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளான்.
கைது செய்யப்பட்டவர்களில் 49 வயது இராணுவ வீரர் ஒருவரும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.