மெல்லக் கொல்லும் முள்ளுத்தேங்காய் (பாம் ஒயில்)

உலகிலுள்ள ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திப்பொருட்களுக்குப் பின்னால் அந்தப் பொருளை உற்பத்திசெய்யக் காரணமாக அமைந்த ஒரு சமூகத்தின் அவலக்குரலும், பல்வேறு உயி ரினங்களின் அழுகுரலும் நிறைந் திருக்கின்றன என்பது கசப்பான உண்மை. மனித உழைப்பை உறிஞ் சித் தின்னும் ஒட்டுண்ணிகளான பன்னாட்டு நிறுவனங்களின் சூழ்ச்சிக்கு அநேகமான நாடுகள் அடிபணிந்து கிடப்பதை சமீபகால மாக தமிழ் சினிமா திரையிட்டுக் காட்டுகின்றது.

இந்நிறுவனங்களின் ஒரே இலக்கு இலாபம் மட்டுமே. அதற் காக ஒரு சமூகத்தையோ, ஏன் ஓர் இனத்தையோ கூட காவுகொடுக்கத் தயங்காத தனவந்தர்களே இவர்கள். இதற்காக சொந்த நாட்டு இனங் களையோ அல்லது அவர்களுடைய இயற்கை வளங்களையோ இவர் கள் எப்போதும் பயன்படுத்திய வரலாறுகள் கிடையாது.

எப்போதும் வளர்ந்துவரும் அல்லது அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளே இவர்களுக்கு பலிக்கடாக்களாக உள்ளன. இந்தப் பலிக்கடாக்களின் பட்டிய லில் இலங்கையும் எப்போதோ உள் வாங்கப்பட்டுவிட்டது. இவ்வாறு பன்னாட்டு நிறுவனங் களால் தற்போது அதிக இலாபம் ஈட்டப்பட்டுவரும் ஒரு தொழிற்று றையாக “பாம் ஒயில்’ இருக்கிறது.

ஆங்கிலத்தில் “Plam oil‘, சிங்களத்தில்”கட்டுப்’, தமிழில் “முள்ளுத்தேங்காய்’ என்று எல்லோ ராலும் அழைக்கப்படுகின்றது. பாம் ஒயில், தேங்காய் எண்ணெய்க்கு மாற்றீடாகவும், நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களின் உற்பத்தியிலும் தாக்கம் செலுத்துகின்றது. இதனைத் தவிர்த்து அழகுசா தனப் பொருட்களின் உற்பத்தி, மிருகங்களின் உணவு உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காகவும் இது பயன்படுகின்றது.

இலங்கையில் பாம் ஒயில்

சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே பாம் ஒயில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1966ஆம் ஆண்டு காலியில் நாகியதெனியாவில் பாம் ஒயில் மரக்கன்றுகளுக்கான (முள்ளுத்தேங் காய்க் கன்று) தவறணை 150 ஏக்கரில் நிர்மாணிக்கப்பட்டது. இதுவே இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது பாம் ஒயில் மரக்கன்றுகளுக்கான தவறணையாகும்.

இந்த மரக்கன்றுகள் 1972ஆம் ஆண்டு நடப்பட்டுள்ளது. 150 ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்ட இது, பின்னர் 1981ஆம் ஆண்டு 870 ஏக்கர்களாக விஸ்தரிக்கப்பட்டது. வர்த்தக நோக்கத்தை மாத்திரம் கொண்டு பயிரிடப்படும் பாம் ஒயில் மரங்கள் மழைவீழச்சி அதிகமாக கிடைக்கும் இடங்களில் பயிரிடப்ப டுகின்றன. எதிர்வரும் ஆண்டுகளில் பாம் ஒயிலுக்கான கேள்வி அதிகரிக்கும் என்பதை கணக்குப்போட்டுக்கொண்ட பெருந்தோட்டக் கம்ப னிகள், சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக தங்களுக்காக உழைத்துக்கொடுக்கும் தொழி லாளர்களின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல், பாம் ஒயில் உற்பத்தியில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளன.

தேயிலைத் தோட்டங்கள் காடாகி வருவதாலும், இறப்பர் மற்றும் தேங்காய் உற்பத்திகளைக் காட்டிலும் குறைந்த காலத்தில் அதிக இலாபத்தை பாம் ஒயில் உற் பத்தியில் ஈட்டிக்கொள்ளமுடியும் என்பதாலும் பெருந்தோட்டக் கம்ப னிகள் இதில் அதிக ஆர்வங்காட்டி வருகின்றன. தற்போது இலங்கையில் மிகப்பெரிய அளவில் 3,157 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வட்டவளை பெருந் தோட்டக் கம்பனி பாம் ஒயில் உற் பத்தியில் ஈடுப்படுகின்றது. இதற்கு அடுத்ததாக நமுனுகல பெருந்தோட்டக் கம்பனி 2 ஆயிரத்து 20 ஏக்கர் நிலப்பரப்பில் பாம் ஒயில் உற்பத்தியை விரிவுபடுத்தியுள்ளது.

oil-5.jpg

எல்பிட்டிய பெருந்தோட்டக் கம்பனி ஆயிரத்து 447 ஏக்கரிலும், அகலவத்த பெருந்தோட்டக் கம்பனி ஆயிரத்து 294 ஏக்கரிலும் பாம் ஒயில் உற்பத்தியில் ஈடுபடுகின்ற அதே வேளை, கேகாலை பெருந்தோட்டக் கம்பனி ஆயிரத்து 125 ஏக்கரில் இதன் உற்பத்திகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

ஒரு ஏக்கரில் சுமார் 60 பாம் ஒயில் மரங்களை மாத்திரமே பயிரிடப்பட முடியும். எனினும், இதனை பராமரிப் பதற்கான செலவு தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்திகளைக் காட்டிலும் குறைவு. 10 ஏக்கரை பராமரிப்ப தற்கு ஒரு தொழிலாளியே தேவை. இதனால், பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, பொகவந்தலாவை பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டங்களிலும் சுமார் 700 ஏக்கர் அளவில் பாம் ஒயில் உற்பத்திகளை மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இலாபம் ஈட்டிக்கொள்ள முடியும் என்ற ஒரே காரணத்துக்காக “பொன் முட்டை இடும் வாத்தின்’ நாம் ஒரே தடவையில் அதன் வயிற் றைக் கிழித்து பொன் முட்டைகளை அள்ள நினைப்பதில் புத்திசாலித்தனம் என எதுவும் இருக்கிறதா? தெங்கு ஆராய்ச்சி நிலையம் முறையான ஆய்வுகளோ அல்லது எதிர்காலப் பாதிப்புகள் தொடர்பிலோ ஆராய்ந்து பார்க்காமல் சுமர் 20 ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் பாம் ஒயில் மரங்களைப் பயிரிடத் திட்டமிட்டுள்ள து. அவ்வாறு செய்வது தேங்காய் மற்றும் இறப்பர் உற்பத்திகளை அழிக்கும் நடவடிக்கை என பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

பெருந்தோட்ட அமைச்சும், இறப்பர் உற்பத்திக்கான இறப்பர் மரங்களைக்கொண்ட தோட்ட நிர்வாகங்களுக்கு 6 சதவீத இறப்பர் மரங்களை அகற்றி அதில் பாம் ஒயில் மரங்களை நட அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதியானது தென்னை மற்றும் இறப்பர் மரங்களை நம்பி வாழும் பெருந்தோட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியாகும்.

அத்தோடு, தென்னை மற்றும் இறப் பர் உற்பத்தியை அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்வதாக இது உள்ளது. தற்போதுவரையில் தேங்காயின் விலை அதிகரித்தே காணப்படுகின் றது. இதற்கு ஒருவகையில் பாம் ஒயிலும் முக்கிய காரணியாக உள்ள து. இதனை கருத்திற்கொள்ளாத அரசு பிலிப்பைன்ஸிலிருந்து தேங் காய் இறக்குமதி செய்வது என்பது கண்துடைப்பு நாடகமாகும்.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் இறப்பர் உற்பத்திக்கு அதிகளவிலான கேள்வி உலக நாடுகள் மத்தியில் காணப்படுகின்றது. எனினும், செயற்கை இறப்பரால் தற்போது இறப்பர் மரங்களின் பாலில் இருந்து எடுக்கப்பட்டு உருவாக்கப் படும் இறப்பருக்கு உலக சந்தையில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எனினும், இறப்பர் மரங்களை வளர்ப்பதால் இறப்பர் பாலைத் தவிர்த்து, அதனை விறகிற்காகவும், பலகைக்காகவும் மண்ணரிப் பைத் தடுக்கவும் உபயோகின்றனர்.

HI_284108_James_Morgan_WWF_International.jpg

இறப்பர் மரங்களை அழித்து மேற்கொள்ளப்படும் பாம் ஒயில் மரங்களால் இந்த நன்மைகள் கிடைக்குமா என்றால் அதற்கு இல்லை என்ற பதிலே பலரிடமி ருந்து வருகின்றது. முதலாளித்துவக் கொள்கையிலுள்ள முதலைகள் தாங்கள் எவ்வாறு இலாபத்தை ஈட்டுவது என்பதிலேயே கவனம் செலுத்துகிறார்களே தவிர, தொழிலாளர்களின் நலன்சார் விடயங்களில் அவர்கள் கவனம் செலுத்துவதாகத் தெரி யவில்லை. இதற்குச் சிறந்த உதராணம் பாம் ஒயில் உற்பத்தியாகும். தேயிலை, இறப்பரை நம்பி வாழ்ந்த தோட்ட மக்களுக்கு முள்ளுத்தேங்காய் பாரிய அச்சுறுத்தலாக உருவாகிவருகின்றது.

பெருந் தோட்டத் தொழிலாளர்கள் நாளுக்குநாள் முதலாளித்துவத்தின் சூழ்ச்சி வலைக்குள் சிக்கித் தவிக்கின்றனர். முள்ளுத்தேங்காய் அதாவது, பாம் ஒயிலால் பெருந்தோட்ட மக்கள் எதிர்கொண்டிருக்கும், எதிர் கொள்ளப்போகும் பிரச்சினைகள் என்ன? இதற்காக குரல் கொடுப்ப வர்கள் யார்? குரல் கொடுப்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? எமது வாழ்வாதாரத்தை சி தறடிக்கப்போகும் முள்ளுத்தேங் காயை நாம் எப்படி சிதறுக் காயாக்க போகிறோம்? இவ்வாறு பல்வேறு முக்கிய பய னுள்ள ஆதாரங்களை அடுத்துவரும் கட்டுரைகள் சுமந்துவரும்.