விடுதியில் நடந்த அடாவடி!

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இன்று இடம்பெற்ற அடாவடித்தனமான உரையாடல் சம்பவம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

அந்த விடுதியின் உரிமையாளர் அனைவருக்கும் புரியும் வகையில் ஆள் அடையாளத்தை நிரூபிக்க அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோருகின்றார்.

எனினும், உரிமையாளர் தமிழர் என்பதை அறிந்து கொண்ட பெரும்பான்மையினத்தை சேர்ந்த பெண் ஒருவர், “நான் சிங்களவர். உன்னால் என்ன செய்ய முடியும்” எனும் அகங்காரத்தில் பதிலளித்துள்ளார்.

இவரின் பேச்சு “நாட்டில் சிங்கள மேலாதிக்கம் புரையோடிப்போயுள்ளதை எடுத்துக்காட்டுகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பல ஆயிரக்கணக்காண உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் தமிழர்களுக்கு இது வரையிலும் தீர்வு வழங்கப்படவில்லை.

இவ்வாறு, பெரும்பான்மையின மக்கள் மனதில் குடிகொண்டுள்ள மேலாதிக்க சிந்தனை அவர்களை விட்டு நீங்கும் வரையில், நாட்டில் சமதானமும், இனநல்லுறவும் சாத்தியமற்றதாகவே இருக்கும்.

அண்மையில், சம்பூர் சூடைக்குடா ஆலய பிரச்சினையின் போது கிழக்கு மாகாண ஆளுனரின் மனைவியின் பேச்சிலும் இவ்வாறான ஒரு தன்மையை காண முடிந்தமையும் குறிப்பிடத்தக்கது.