மற்றுமொரு கோர விபத்து கிளிநொச்சியில்!

பரந்தன் பூநகரிப் பகுதியில் மற்றுமொரு விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

தம்புள்ளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மரக்கறி ஏற்றிச் சென்ற லொறி கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பரந்தன் ஓவசியர் கடைச் சந்திப் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் சாரதி காயமடைந்துள்ளதுடன், லொறி பாரிய சேதமடைந்துள்ளது.

விபத்து இடம்பெற்றமை தொடர்பில் விசாரணைகளைக் கிளிநொச்சிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை கிளிநொச்சி, இரணைமடுச் சந்தியில் இன்று அதிகாலை 2 ரிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 Capturevdxvdvd