பதவியை விட்டு விலக இப்போதும் தயார் – மைத்திரி

Maithriஅதிபர் பதவியை விட்டு இன்று கூட விலகிச் செல்லத் தயார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமது பதவிக்காலம் எப்போது முடிவடைகிறது என்று விளக்கமளிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரிய விவகாரம் அரசியல் அரங்கில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அக்குரஸ்ஸவில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன,

“ எனது பதவிக்காலம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு எதுவானாலும் ஏற்றுக் கொள்வேன். அதிபர் பதவியை இன்றும் கூட கைவிட்டுச் செல்வதற்குத் தயார்.

அதிபராக என்னால் எவ்வளவு காலம் பணியாற்ற முடியும்  என்பது தொடர்பாக இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுவதால் தான் உச்சநீதிமன்றத்தை தெளிவுபடுத்துமாறு கோரினேன்.

எப்போதும் அதிபர் பதவியில் இருப்பதற்காக ஆட்சிக்கு வரவில்லை. எனினும், நாட்டை முன்னேற்றும் கனவை நிறைவேற்றுவதற்காக பதவியில் இருப்பேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.