உணவு பெற்றுக்கொண்டவருக்கு காத்திருத்திருந்த அதிர்ச்சி!!

தலைநகர் கொழும்பிலுள்ள ஹோட்டல்களின் வழங்கப்படும் உணவு தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

சில உணவகங்களில் சுகாதாரமில்லாத, மனித பாவனைக்கு உகந்த வகையில் உணவு வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

தற்போது வெள்ளவத்தையில் பிரபல உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட சாப்பாட்டில் புழுக்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதியநேர உணவினை பெற்றுக் கொண்டவர் அதில் புழுக்கள் நிறைந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அண்மைக்காலமாக கொழும்பில் பல உணவகங்களில் இவ்வாறான நிலை காணப்படுவது குறித்து மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.