விடுதலைப் புலிகளை 100 வீதம் நம்பினோம்! தவராசா கலையரசன்

தமிழர்களாகிய நாங்கள் அனைவரும் ஆயுத ரீதியாக மிகவும் பலம் பொருந்திய விடுதலைப்புலிகள் இயக்கத்தினை 100 வீதம் நம்பியிருந்தோம் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தற்போது நாவிதன்வெளி பிரதேசசபையின் முதன்மை வேட்பாளருமான தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை நாவிதன்வெளி பிரதேசபைக்கான தேர்தல் பரப்புரை பிரசாரக்கூட்டத்தில் மத்தியமுகாம் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைத்தெரிவித்தார்.

இந்நிகழ்வானது மத்திய முகாம் பிரதேசத்தில் இம்முறை த.தே.கூட்டமைப்பு சார்பாக தேர்தல் களத்தில் இறங்கியிருக்கும் வேட்பாளர் முருகப்பன் நிரோஜன் தலைமையில் நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் தமிழ் மக்கள் பெரும் பலம்பொருந்தியவர்களாக காணப்பட்டார்கள். அவ்வாறான சந்தர்ப்பத்தில்தான் த.தே.கூட்டமைப்பு தோற்றம்பெற்றது.

அவ்வாறு மக்களின் பலத்துடன் தோற்றம் பெற்ற த.தே.கூட்டமைப்பானது தற்போது தமிழ் மக்களுடைய அடிப்படை பிரச்சினைகள் பற்றி தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியலும் எடுத்தியம்பி அதற்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு போராடி வருகின்றது.

Capturexfdxfgyj

அதனடிப்படையிலேதான் தற்போது நாம் சந்தித்திருக்கும் தேர்தலும் அமைந்திருக்கின்றது. உள்ளூராட்சி அதிகார சபை என்பது வீதி அபிவிருத்தி, மக்களுக்கான சுத்தமான குடிநீர், பாதுகாப்பான சுகாதாரம், தெருவிளக்கு போடுதல், நோய்கள் வராமல் தடுத்தல் போன்ற மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை உள்ளடக்கியதாக உள்ளுராட்சி மன்றங்களின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றது.

இந்தப்பிரதேசத்தினை பொறுத்தவரையில் இங்குள்ள இளைஞர்கள் ஆயுதரீதியான கலாசாரம் மேலோங்கிய காலகட்டத்தில் தமது இனத்தின் விடுதலைக்காக வேண்டி சாதுரியமாக செயற்பட்டு எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக அரும்பாடுபட்டு உழைத்தார்கள்.

Capturejhijiipolpl

2006ஆம் ஆண்டிற்கு பிற்பாடுதான் தமிழர்கள் இந்தப்பிரதேசத்தில் அரசியல் அதிகாரத்தினை பெற்றவர்களாக மாற்றம் பெற்றார்கள். அதற்கு முன்னர் நாவிதன்வெளி பிரதேசம் சம்மாந்துரை பிரதேசசபையுடனே சேர்ந்தியங்கி வந்தது.

நாவிதன்வெளி பிரதேசபை தனியான அரசியல் பலத்துடன் 2006 ஆம் ஆண்டு பிரிந்த பின்னரே தமிழ்மக்களுக்கா பல அபிவிருத்திகள் நடைபெற்றிருக்கின்றது. அந்த காலகட்டம் என்பது த.தே.கூட்டமைப்பினை பொறுத்தவரையில் உயிர் அச்சுறுத்தல் மிக்கதொரு காலகட்டமாகவே இருந்தது.

எமது இளைஞர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வரலாறுகளும் இங்கேதான் இடம்பெற்றது. அந்த காலகட்டத்திலும் நாங்கள் எமது மக்களின் முழு ஆதரவுடனும் இந்தச்சபையை கைப்பற்றி எமது மக்களுக்கு பணியாற்றினோம் என்பது யாவருக்கும் தெரிந்த விடயம்.

Capturewrrdtrfytuyg

இம்முறை நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலானது கலப்பு முறையிலான ஒரு புதிய தேர்தல் முறையாகும். இந்தத்தேர்தல் முறையில் குறைந்தது 25 வீதத்திற்கு மேல் பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது தேர்தலின் முக்கிய அம்சமாகும்.

அந்தவகையிலேதான் இம்முறை இந்தப்பிரதேசத்தில் இருந்தும் பெண்வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள் அவர்களுக்கும் உங்களுடைய ஆதரவினை தெரிவிக்க வேண்டிய கடப்பாடு இருக்கின்றது.

இம்முறை வேட்பாளர் தெரிவென்பது அனைவருடைய ஆதரவுடன்தான் நடைபெற்றது. குறிப்பாக ஒவ்வொரு பிரதேசத்திற்கும் உடைய வேட்பாளர்களை அந்தந்த பகுதியில் இருக்கும் அமைப்புக்களும், பொதுமக்களும் இணைந்தே இறக்கியிருக்கின்றீர்கள். அவர்களது கரத்தினை பலப்படுத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கின்றது என்றார்.