குடும்ப உறவை தவிர்த்த தம்பதி! காரணம் என்ன?

அமெரிக்காவை சேர்ந்த ஒரு தம்பதிக்கு திடீரென அதிகப்படியாக உடல் எடை கூடியதால் அவர்கள் செக்ஸ் உறவை 11 வருடங்களாக தவிர்த்து வந்துள்ளனர். தற்போது அவர்களுடைய எடை கிட்டத்தட்ட பாதி குறைந்துவிட்டதால் மீண்டும் செக்ஸ் உறவை தொடர்ந்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த லீ மற்றும் ரென ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருந்தபோது திடீரென இருவரது உடலும் கன்னாபின்னா என்று எடை அதிகரித்து. ஒரு கட்டத்தில் லீயின் எடை 300 கிலோவுக்கும், ரெனாவின் எடை 245 கிலோவுக்கும் சென்றது.

இந்த நிலையில் உடல் எடை காரணமாக செக்ஸ் உறவை நிறுத்திய இந்த தம்பதிகள் உடல் எடையை தகுந்த உடற்பயிற்சி மற்றும் மருத்துவ சிகிச்சை மூலம் குறைக்க முடிவு செய்தனர். தற்போது அவர்களுடைய எடை பாதிக்கும் மேல் குறைந்துள்ளதால் மீண்டும் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் செக்ஸ் உறவை ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.

Capturec cfbfc