இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி!

இத்தாலியில் வாழும் இலங்கை தமிழ் குடும்பம் ஒன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிளாஸ்டிக் அரிசியை உணவாக உட்கொண்டமையினால் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாலி, ஜினொவா நகரத்தில் கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நகரத்தில் உள்ள சீன கடை ஒன்றில் பெற்றுக் கொண்ட அரிசியை சமைத்து உணவாக உட்கொண்டதன் பின்னர் அவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளதுடன் வாந்தி, பேதி என பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் உட்கொண்ட அரிசியை சோதனையிட்ட போது அது பிளாஸ்டிக் அரிசி என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இத்தாலி பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகளினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Capturexdada