பத்து விமானங்கள் ஏறி புதல்வியைக் காண வந்த பாசக்கார தந்தை!!

அமெரிக்காவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் ஈராக்கில் பணியில் இருந்த நிலையில் தனது மனைவிக்கு பிறந்த குழந்தையை காண பத்து விமானங்களில் பயணித்து தாய் நாட்டுக்கு வந்துள்ளார்.அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் பிரான்கோஸ் கிளர்பி. ராணுவ வீரரான இவர் ஈராக்கில் பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் கடந்த 1-ஆம் திகதி பிரான்கோஸ் மனைவி நடாலியாவுக்கு முதல் குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது.தனது குழந்தையை காண வேண்டும் என முடிவெடுத்த பிரான்கோஸ் ஈராக்கிலிருந்து பத்து விமானங்களில் ஏறி கலிபோர்னியாவுக்கு வந்துள்ளார். குவைத் – துருக்கி, துருக்கி – பிராங்பர்ட், பிராங்பர்ட் – பால்டிமோர், பால்டிமோர் – அட்லாண்டா உள்ளிட்டவையும் இதில் அடக்கமாகும்.இப்படி இரண்டு நாட்கள், 1000 மைல்களுக்கும் அதிகமான பயணத்தையடுத்து தனது தாய் நாட்டுக்கு பிரான்கோஸ் வந்தடைந்தார்.பின்னர் தனது மனைவியையும், குழந்தையையும் பார்த்து மகிழ்ந்தார். குழந்தைக்கு ஜூலியா என தம்பதிகள் பெயர் வைத்துள்ளனர்.இது குறித்து நடாலியா கூறும் போது;   இந்த மகிழ்ச்சியான நிமிடத்தை அனுபவிக்க என் கணவர் நிச்சயம் வருவார் என என் மனம் கூறியது.ஏனெனில், எங்களுடன் இருக்க அவர் அதிகம் விரும்பினார் எனக் கூறியுள்ளார்.இந்நிலையில், பிரான்கோஸுக்கு 40 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதுவரை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு பின்னர் தனது பணிக்கு மீண்டும் திரும்பவுள்ளார்.