பாலா தமிழ் சினிமாவில் எப்போதும் தரமான படங்களாக இயக்குபவர். இவர் இயக்கத்தில் நேற்று நாச்சியார் படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.
இந்நிலையில் பாலா நேற்று பிரபல பத்திரிகை கொடுத்த விருது விழாவில் கலந்துக்கொண்டு பேசுகையில் ‘விருது பலருக்கும் தகுதியான முறையில் சென்றுள்ளது.
ஆனால், 1 அல்லது2 விருதுகள் மட்டும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை’ என்று அவர் கூற, பாலா யாரை தாக்கி இப்படி சொன்னார் என பெரிய விவாதம் சமூக வலைத்தளங்களில் தொடங்கியுள்ளது.