ஐதேக அதிருப்தியில்!!

தமது பதவிக்காலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விளக்கம் கோரியமை, அவரை ஆட்சியில் அமர்த்திய ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிவில் சமூகத்துக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல,

“தமது பதவிக்காலம் எப்போது முடிவடைகிறது என்று உச்சநீதிமன்றத்திடம் சிறிலங்கா அதிபர் விளக்கம் கோருவதற்கு முன்னர், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தால் நல்லது.

இது அரசாங்கத்தின் பங்காளிகளிடையே அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆறு ஆண்டுகள் என்று வந்தாலும் கூட, 5 ஆண்டுகளின் பின்னர், சிறிலங்கா அதிபர் முன் கூட்டியே தேர்தலை அறிவிக்கும் வாய்ப்பு உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (4)