அமெரிக்க வாழ் இந்திய இளைஞர் தான் காதலித்து வந்த நபரை பாரம்பரிய முறைப்படி ஓரினச் சேர்க்கை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பணி புரிந்து வரும் இந்தியாவைச் சேர்ந்த ஹ்ரிஷி மோகன்குமார்(வயது 40) என்னும் நபர் வியட்னாமைச் சேர்ந்த வின்ஹ் என்னும் நபரை காதலித்து வந்துள்ளார்.
மும்பை ஐஐடி-இல் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ள ஹ்ரிஷி, கலிபோர்னியாவில் பணி புரிந்த போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.
இருவரின் காதலுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ஹ்ரிஷியின் பெற்றோர்களை ஒரு கட்டத்தில் சமாதானம் செய்துவிட்ட ஹ்ரிஷி, இந்தியாவில் வைத்து வின்ஹை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
அதன்படி, தனது சொந்த ஊரான மகாராஷ்ட்ராவின் யாவத்மால் பகுதியில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் சொந்த பந்தங்கள் சூழ அங்கு வந்த ஹ்ரிஷி- வின்ஹ் இருவரும் இணைந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
மேலும், சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணச் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.