டெல்லியில் இருந்து ஐதராபாத் செல்லும் ரெயிலில் பயணி ஒருவர் அவர் கொண்டு வந்து நாய் குட்டிக்கு டிக்கெட் எடுக்க வில்லை. இந்நிலையில் ஆக்ரா ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் ஷிவ் குமார் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது டெல்லியில் இருந்து ஐதரபாத் செல்லும் பயணி ஒருவரிடம் பரிசோதனை மேற்கொண்டதில் அவர் கொண்டு வந்த நாய் குட்டிக்கு டிக்கெட் எடுக்கவில்லை என்பது தெரியவந்தது. அதனைதொடர்ந்து அவரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இது குறித்து டிக்கெட் பரிசோதகர் ஷிவ் குமார் கூறுகையில், நாங்கள் ரெயில்வே விதிகளின் படி தான் அவருக்கு அபராதம் விதித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.