60 வயது முதியவருடன் திருமணம்: ஒரே வாரத்தில் புதுப்பெண் செய்த திடுக் செயல்

இந்தியாவில் 60 வயது முதியவரை திருமணம் செய்து கொண்டு ஒரே வாரத்தில் அவரின் பணம் மற்றும் நகைகளை திருடி சென்று ஓடிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

மத்தியபிரதேச மாநிலத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. ரூப்தாஸ் பைரகி (60) என்ற முதியவரின் மனைவி வந்தனா கடந்த 1992-ல் இறந்துவிட்ட நிலையில் அவருக்கு குழந்தையில்லை.

தன்னுடைய கடைசி காலத்தில் பெண்ணொருவர் இருந்தால் உதவியாக இருக்கும் என எண்ணிய ரூப்தாஸ் இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில் அவரின் நண்பர்கள் மூலம் அசோக் என்பவர் பழக்கமானார்.

அசோக்கிடம் தான் இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பதை பற்றி ரூப்தாஸ் சொல்ல தனக்கு தெரிந்த 40 வயது விதவை பெண் ஒருவர் இருப்பதாக அசோக் கூறியுள்ளார்.

இதையடுத்து பூஜா என்ற பெண்ணை ரூப்தாஸுக்கு அசோக் அறிமுகப்படுத்திய நிலையில் இருவருக்கும் நவம்பர் 22-ஆம் திகதி திருமணம் நடைப்பெற்றது.

திருமணத்துக்கு பின்னர் தனது வீட்டு சாவிகள் அனைத்தையும் பூஜாவிடம் ரூப்தாஸ் கொடுத்துள்ளார்.

ஒருவாரம் கழித்து நவம்பர் 29-ஆம் திகதி வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்த ரூப்தாஸ் கீழ் அறையிலிருந்த பூஜாவை அழைத்துள்ளார்.

ஆனால் அவர் குரல் கொடுக்காத நிலையில் கீழே சென்று ரூப்தாஸ் பார்த்துள்ளார். அப்போது அறையின் பீரோ சாவி திறக்கப்பட்டு அதிலிருந்த 3 லட்சம் பணம் மற்றும் 1 லட்சம் மதிப்பிலான நகைகளை காணாமல் போயிருந்தது.

பூஜா தான் இதை திருடி கொண்டு சென்றுள்ளார் என்பதை உறுதி செய்த ரூப்தாஸ் பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

பொலிசார் முதலில் அசோக்கை கைது செய்து, பின்னர் பூஜாவை கைது செய்தார்கள். அவரிடம் ரூபாய் 5000-மும், மோதிரமும் மட்டுமே இருந்துள்ளது.

விசாரணையில் பூஜாவின் உண்மை பெயர் ஹேமா என தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஹேமாவின் சகோதரர் ஜிதேந்திராவை பொலிசார் தேடி வரும் நிலையில் மீதி நகை மற்றும் பணம் குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.