இலங்கை விமான படைக்கு சொந்தமான விமானத்தில் யாழ்ப்பாணம் சென்ற அமைச்சர் ஒருவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த தைப்பொங்கள் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்ற அமைச்சர் மஹிந்த அமரவீரவே இவ்வாறு உயிர் தப்பியுள்ளார்.
அமைச்சர் உள்ளிட்ட குழுவினருடன் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு செல்லவிருந்த போதிலும், தலைமன்னர் நோக்கி விமானி விமானத்தை கொண்டு சென்றுள்ளார்.
பலாலி விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு பதிலாக தலைமன்னார் தீவுக்கு அருகில் விமானம் செல்வது குறித்து அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது யாழ்ப்பாணம் செல்லும் வழி தனக்கு தெரியாதென விமானி குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் கூகிள் வரைப்படத்தின் உதவியுடன் விமானத்தை பலாலி விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு விமானி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக கொழும்பில் இருந்து பலாலி செல்ல 45 நிமிடங்கள் மாத்திரமே செலவிடப்படுகின்ற நிலையில், நேற்றைய தினம் விமான நிலையத்தை சென்றடைய 2 மணித்தியாலங்கள் செலவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமான நிலையத்தை நெருங்க வேண்டிய சந்தர்ப்பத்தில் விமானத்தில் எரிபொருள் தீர்ந்து போய் விட்டமையே ஆபத்தான நிலைமைக்கு முக்கிய காரணமாகியுள்ளது.
அதன் பின்னர் அமைச்சரின் அதிகாரிகள் கொழும்பில் இருந்து இரண்டு வாகனங்களை வரவழைத்துள்ளனர். அதற்கமைய மீண்டும் நேற்றிரவு வாகனத்தில் அமைச்சர் கொழும்பிற்கு சென்றுள்ளார்.