யாழில். தந்தையை கட்டி வைத்து தாக்கிய மகன்!!

மதுபோதையில் வீட்டுக்கு வந்து குழப்பம் விளைவித்த தந்தையினை கட்டி வைத்து மகன் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று செம்மணி வீதி நல்லூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.சிவலிங்கமூர்த்தி மகிந்த வயது 45 மதிக்கத்தக்க தந்தையே தலையிலும், முகத்திலும் என்ற நபரே காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாரதியாக கடமையாற்றி வரும் நபர் மதியம் உணவு உண்பதற்காக வீட்டுக்கு வந்துள்ளார். மதுபோதையில் வீட்டுக்கு வந்த மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. கணவனின் தொந்தரவு தாங்கமுடியாத மனைவி வெளியில் சென்றிருந்த மகனை தொலைபேசியில் அழைத்து வீட்டுக்கு வரவழைத்து தாக்கியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது.

மகன் தந்தையின் இரு கைகளையும் கட்டிவைத்து விட்டு அறைக்குள் பூட்டி தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கண்ணில் பாதிப்புக்கு உள்ளானதுடன், தலையிலும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தாக்கிய மகனை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.