இலங்கையின் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ வருவதற்கான தகுதிகள் தனக்கு இருப்பதாக தேசிய சகவாழ்வு அரச கரம மொழிகள் அமைச்சர் மனோ கனேசன் தெரிவித்தார். எனினும் அந்தப் பதவிகளை தாம் கோரப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு – வெள்ளவத்தையில் நேற்று திங்கட்கிழமை தமிழ் முற்போக்கு கூட்டனியின் கட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன், கொழும்பு மாநகர சபைக்கு தமிழ் மேயர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் எனும் நிபந்தனையுடனே ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிப்பதாக குறிப்பிட்டார்.
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தமிழ் முற்போக்கு முன்னனியின் இணைத்தலைவர்களில் ஒருவருமான அமைச்சர் மனோ கனேசன் ஐக்கிய தேசிய கட்சியுடன் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து தேர்தலில் போட்டியிடுகின்றார்.1999 ஆம் ஆண்டு மேல் மாகாண சபை தேர்தலில் மலையக கூட்டு கட்சிகளில் மயில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அன்று ஆரம்பித்த அரசியல் பிரவேசம் இன்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக மாறும் அளவிற்கு அவரை உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.