வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகள் காரணமாக உலக நாடுகள் மற்றும் ஐ. நா பாதுகாப்பு அமைப்பு அந்நாட்டின் மீது பல்வேறு தடைகளை விதித்துள்ளது.
இதை, சமாளிக்க வட கொரிய மக்கள் புதிய உணவு வகைகளைத் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர்.
ஸ்பீட் கேக்:
இந்த சிற்றுண்டியை சமைக்கத் தேவையில்லை. சில நிமிடங்களில் செய்யலாம். சோளத்தில் இருந்து செய்யப்படும் இந்த உணவு அரிசியை விட விலை குறைவானது.
மனிதன் தயாரித்த கறி:உணவு சோயா எண்ணெய் உற்பத்தியின் போது கிடைக்கும் சக்கையில் இருந்து செய்யப்படுகிறது. இந்த சக்கையினை வழக்கமாகப் பன்றிகளுக்கு உணவாகப் போடுவார்கள்.
டோஃப்பு:சோயாபீனில் இருந்து தயாரிக்கப்படும் டோஃப்புக்கள் முக்கோண வடிவில் மடிக்கப்பட்டு, அரிசி மற்றும் மிளகாய் சாஸால் நிரப்பபட்டிருக்கும்.
பிஸ்கட்:
மாவு ஈஸ்ட், சர்க்கரை மற்றும் திராட்சை குளுக்கோஸினால் இந்த பிஸ்கட் தயாரிக்கப்படுகிறது.
பாப்கார்ன் போன்ற உணவு:வறுத்த சோயா பீன்ஸ் சர்க்கரை பூசப்பட்டிருக்கும் இந்த சிற்றுண்டி பார்க்க பாப்கார்ன் போல இருக்கும்.