விபசாரத் தொழிலிலீடுபட்டு வந்த கணவன், மனைவி உட்பட மூவரை கல்கிஸை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மூவரும் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட 22 வயதுடைய கணவனே குறித்த மனைவி உட்பட மற்றைய பெண்ணுக்கு முகவராக செயற்பட்டுள்ளார்.
21 வயதுடைய தானியா என்ற பட்டப்பெயரைக் கொண்ட பெண் மனைவியெனவும் இவர்களுக்கு 5 வயதில் பிள்ளையொன்று இருப்பதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து அறியமுடிகின்றது.
மற்றைய பெண் 29 வயதுடைய சுது எனும் பட்டப் பெயரைக்கொண்டவரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைதுசெய்யப்பட்ட மூவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான நிலையில், விபசாரத்திலீடுபட்டு உழைக்கும் பணத்தை போதைப்பொருள் பாவனைக்கு செலவழித்து வந்துள்ளனர்.
ஐந்து நட்சத்திர விடுதிகளில் பெரும் பணம் படைத்தவர்களையே இவர்கள் தமது வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளதாகவும் ஒருவரிடம் விபசாரத் தொழிலுக்காக 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபா வரை அறவிட்டுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சமூக வலைத் தளமொன்றில் இருந்த தகவல்களுக்கு அமையவே பொலிஸார் உடனடியாக செயற்பட்டு குறித்த மூவரையும் கைதுசெய்துள்ளனர்.
இவர்களுக்கு பின்னணியில் பாரிய வலையமைப்பொன்றுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார், இவர்களுடன் தொடர்புடைய முக்கிய புள்ளியை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மூவரையும் கல்கிஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.