இன்றைய ராசிபலன் (16/01/2018)

  • மேஷம்

    மேஷம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். புதியவர்கள் நண்பர்களா வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலை களை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங் கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப் பீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். சகோதர வகையில் நன்மை உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபா ரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

  • கடகம்

    கடகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள் வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறி வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை விலகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்பு கள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

  • கன்னி

    கன்னி: நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவி யால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப் பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

  • துலாம்

    துலாம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்த வர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். தைரியம் கூடும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவா கும். முகப்பொலிவுக் கூடும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

  • தனுசு

    தனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துபோகும். பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். அவசரப்பட்டு அடுத்தவர் களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத் தில் புதிய முயற்சிகள் தள்ளிப் போய்
    முடியும். உத்யோகத்தில் சக ஊழியர் களால் சங்கடங்கள் வரும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

  • மகரம்

    மகரம்: கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசுவது நல்லது. ஆடம்பரச் செலவு களால் சேமிப்புகள் கரையும். உடல் நலம் பாதிக் கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மறை முகப் பிரச்னைகள் வந்து நீங்கும். அலைச் சலுடன் ஆதாயம் தரும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: குடும்பத்தில் உங் கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வராது என்றிருந்த பணம் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சிறப் பான நாள்.

  • மீனம்

    மீனம்:  நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறு வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.