இலங்கை தமிழ் இளைஞன் கனடாவில் குத்திக் கொலை!!

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

625.85.560.350.160.300.053.800.147.160.90Oshawa வணிக வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

17 வயதான நிவேதன் பாஸ்கரன் என்ற இளைஞனை கொலை செய்த குற்றச்சாட்டில் 16 வயதுடைய இளைஞன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கத்தியால் குத்தப்பட்ட நிலையில் காணப்பட்ட பாஸ்கரனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறின் அடுத்தே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாஸ்கரன் மிகவும் மகிழ்ச்சியான இளைஞர் எனவும், எப்போதும் சிரித்தவாறு காணப்படும் ஒருவர் எனவும், தன்னை எப்போதும் சிரிக்க வைத்து கொண்டிருப்பார் எனவும் பாஸ்கரின் நண்பர் Cassidy Grayson பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

Maxwell Heights Secondary பாடசாலை கற்ற பாஸ்கரின் கொலை சம்பவம் தொடர்பில் பாடசாலை வாரியம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. எனினும் வியாழனன்று வகுப்புகள் முடிந்து சிறிது நேரத்தின் பின்னர் நடந்த சம்பவங்களை விபரிக்கும் அறிக்கை ஒன்று பாடசாலை இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய மாணவர் கைது செய்யப்பட்டதனை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரின் விபரங்கள் இளைஞர் குற்றவியல் நீதி சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளமையினால் ஊடகங்களுக்கு அவரது தகவல்கள் வெளியிடப்படவில்லை.

எனினும் இளைஞனின் மரணம் தொடர்பில் நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியிட்டுள்ளதுடன், இளைஞனின் மரண சடங்குகளுக்காக நிதி சேகரித்து வருகின்றனர்.