இதில் படுகாயமடைந்த நபர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் வெளியாகாத நிலையில், மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, யாழ். பூநாரி பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற மற்றுமொரு வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.