பிரெஞ்சுக் குடியுரிமை கோரும் பிரித்தானிய மக்களின் எண்ணிக்கை எட்டு மடங்காக அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய யூனியனை விட்டு விலகுவதாக பிரித்தானியா முடிவெடுத்த பிறகு, பிரெக்சிட் தீர்மானம் ஏற்படுத்தியுள்ள நிலையற்றத்தன்மையே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
கடந்த வருடத்தில் மட்டும் 3173 பிரித்தானியப் பிரஜைகள் பிரெஞ்சுக் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளார்கள்.
பிரான்சில் இருப்பதை மக்கள் விரும்புகிறார்கள், காரணம், பிரான்ஸ் என்பதைத் தாண்டி, அது ஐரோப்பா என்பதே அதன் முக்கியக் காரணம். அதாவது அவர்கள் ஐரோப்பவை விட்டுப் பிரிய விரும்பவில்லை.
ஆனால் பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது ஐந்து ஆண்டுகள் பிரான்சு நாட்டில் வாழ்ந்திருக்க வேண்டும் அல்லது பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து நான்கு ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும், அவர்களது பிரெஞ்சு மொழித்திறனையும் அவர்கள் நிரூபிக்கவேண்டும்.
2015க்கும் 2017க்கும் இடையில் பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 320இலிருந்து 1518ஆக உயர்ந்துள்ளது.