பெண்களே! ஆண்களுடன் பழகும் பொழுது இதையெல்லாம் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்!

ஆண்-பெண் நட்பு என்பது நிச்சயம் எல்லைக்குட்பட்டது என்பதை பெண்கள் நினைவில் வைக்க வேண்டும். அந்த எல்லையைத் தாண்டினால் அளவுக்கு மீறிய பிரச்சினைகளையும், தொல்லைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும்என்பதை மறந்து விடக் கூடாது.

rel-15-things-every-boyfriend

பாய்பிரண்ட் தொல்லையில் இருந்து தப்பிக்க பெண்களும், பெற்றோரும் தெளிவுடன் இருப்பது அவசியம். அதற்கான சில விஷயங்கள்…

பள்ளி கல்லூரிக் காலத்தில் படிப்பு, எதிர்கால லட்சியம் சம்பந்தமாக பேசுவது, விவாதிப்பது, உதவிக் கொள்வது மட்டுமே நட்பாகும். அதைத் தாண்டி பரிசு கொடுத்தல் – பெறுதல், தனிமையில் சந்தித்தல், புகைப்படம் எடுத்துக் கொள்ளுதல் எல்லாமே நட்பு வட்டத்தை தாண்டியவை, பிரச்சினைக்குரியவை என்பதை பெண்கள் நினைவில் வையுங்கள்.

பெண் குழந்தைகள் பருவ வயதை எட்டியதுமே பருவம் பற்றியும், ஆண்-பெண் நட்பு பற்றியும் பெற்றோர் விளக்க வேண்டியது அவசியம்.

ஆண்-பெண் நட்பின் அவசியம் எதுவரை, அதன் எல்லை எதுவரை என்பது அந்தப் பருவத்திலேயே விளக்கப்பட்டு விட்டால் கல்லூரிப் பருவத்தை எட்டும்போது இயல்பாகவே பெண்கள் கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்வார்கள்.

பருவப் பெண்களும் பெற்றோருக்குத் தெரியாமல் ஆண் நண்பர்களுடன் வெளியில் சுற்றக் கூடாது. தெரிந்து பழகுகிறேன் என்று ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவதையும் தவிர்க்க வேண்டும். பரிசுகள் பெறுவதும், போட்டோ எடுத்துக் கொள்வதும் எப்போது வேண்டுமானாலும் பிரச்சினையை உருவாக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஜாலியாக இருப்போம் என்று பழகுவதும், உடல் ரீதியாக அத்துமீறலை அனுமதிப்பதும் இறுதியில் உங்களுக்குத்தான் ஆபத்தை கொண்டுவரும் என்பதை மனதில் வையுங்கள்.

ஆசையை தெரிவித்து நெருங்கும் ஆண்களிடம் பக்குவமாகப் பேசி தவிர்த்து விடுங்கள். நமது லட்சியம் இதுவல்ல என்பதை விளக்கிவிட்டு விலகிச் செல்லுங்கள்.

தேவையில்லாமல் தொடர்ந்து வரும் ஆண்களைப் பற்றியும், தொல்லை கொடுப்பவர்களை பற்றியும் பெற்றோரிடமும், பொறுப்புக்குரியவர்களிடமும் சொல்லி வையுங்கள். பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

மொத்தத்தில் `பாய்பிரண்டின்` மனநிலையை புரிந்து கொள்ளுங்கள். தவறான நட்பை ஆரம்பத்திலேயே துண்டித்து விடுங்கள். சமூகத்தை புரிந்துகொண்டு பழகுங்கள். உங்கள் லட்சியங்கள் பெரிது. அற்ப விஷயங்களுக்காக அதை நழுவ விடாதீர்கள்!

எல்லா பெண்களும் மேலே உள்ள விசயத்தை கடைபிடித்தால் போதும் எந்த துன்பமும் யாருக்கும் வாராது!