ஏப்ரல் மாதம் என்றாலே பெற்றோர்கள் பரபரப்பாக காணப்படுவார்கள். தங்கள் குழந்தைகளை எந்த பள்ளியில் சேர்க்கலாம், எவ்வளவு கட்டணம் என பல்வேறு யோசனைகளும் வந்துவிடுகின்றன.
அதுவும் தற்போதைய காலகட்டங்களில் யூகேஜி, எல்கேஜி போன்ற ஆரம்ப படிப்பிற்கே உயர்கல்விக்கு ஈடான கட்டணங்களை பள்ளிகள் வசூலிக்கின்றன.
சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளியில் 2021ம் ஆண்டிற்கான எல்.கே.ஜி அட்மிஷன் இப்போதே துவங்கியுள்ளது.
இதற்கான அறிவிப்பு பள்ளி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2020ம் ஆண்டு வரை அட்மிஷன் முடிந்து விட்டதாகவும், தற்போது பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த ஆண்டே அட்மிஷன் வாங்கினால் தான் 2021ம் ஆண்டில் எல்கேஜி படிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
அட்மிஷனுக்கான நேர்காணல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை காலை 9 மணி முதல் 1 மணி வரை நடக்கும் என்றும், இதற்கான அப்பாயின்மெண்டிற்கு பள்ளி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு 2019ம் ஆண்டிற்கான அட்மிஷன் முடிந்து விட்டது. 2020ம் ஆண்டு எல்கேஜிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அந்த பள்ளி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.