15 வயது மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து கொன்று வீசிய கொடூர கும்பல்…

ஹரியானாவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொன்று வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)

அரியானா மாநிலம் ஜன்சா என்ற கிராமத்தை சேர்ந்த தையல் தொழிலாளியின் மகள் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். 3 நாட்களுக்கு முன் வீட்டிலியிருந்து டியூஷனுக்கு சென்றபோது காணாமல் போனார். அதே ஊரைச்சேர்ந்த 20 வயது வாலிபருடன் சென்றுவிட்டதாக கூறப்பட்டது. அச்சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ஊருக்கு அருகே உள்ள கால்வாயில் சிறுமி பிணமாக மிதந்துள்ளதை அறிந்து சிறுமியின் உடலை பரிசோத்தித்த போது, உடலில் அதிக காயங்கள் இருந்துள்ளது.

மேலும் ஒரு கும்பலால் சிறுமி பாலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக நடத்தியுள்ளனர். உடலில் இரும்பு கம்பி செலுத்தப்பட்டதால் நுரையீரல் பகுதி முற்றிலும் சிதைந்து இருந்ததாகவும் தெரிவித்தனர்.

மாணவியைக் கடத்தி சென்ற வாலிபர் தலைமறைவாகி உள்ளார். இந்த கொலைக்கும் வாலிபருக்கும் சம்பந்தம் உள்ளதா என்றும், வாலிபருடன் மாணவி சென்றபோது, மர்ம கும்பலால் கொடூரமாக நடந்து கொலை செய்துள்ளனரா என விசாரித்து வருகின்றனர்.

பரிசோதனை முடிந்து சிறுமியின் உடலை பெற்றோர்களிடம் ஒப்படைத்த போலிசாரிடம், இது குறித்து ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்கி, வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.