லித்துனியாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக மணலை சாப்பிட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Stanislava Monstvilene(70) லித்துனியாவைச் சேர்ந்த இவர் தன்னுடைய உடல் ஆரோக்கியமாக இருப்பதாகவும், தன்னுடைய மூளை கட்டி தொடர்பான நோய் குணமாகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து Stanislava Monstvilene கூறுகையில், எனக்கு மூளை கட்டி தொடர்பான நோய் இருந்தது. நான் சிகிச்சைக்காக சென்ற போது, இது மிகவும் தாமதமான நேரம், அதிக காலம் உயிர் வாழ முடியாது என்று கூறிவிட்டனர்.
நாம் எப்படியும் இறக்கப் போகிறோம், அதற்கு முன் மணலை சாப்பிட்டு பார்த்து விடுவோம் என்ற ஆசை இருந்தது, அதனால் அதை சாப்பிட ஆரம்பித்தேன், அதன் பின் அதுவே பழக்கமாகிவிட்டது.
தற்போது என் உடல்நிலை நன்றாக உள்ளது, எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, என் மூளை கட்டி தொடர்பான நோயும் குணமாகிவிட்டதாக கூறியுள்ளார்.
இது குறித்து சிகிச்சையாளர் Liliana Vaishvilene கூறுகையில், இதுவும் ஒரு வகை போதை தான், ஆனால் மூதாட்டியின் உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது, மணலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அதில் இருந்த கனிம வளங்கள் அவரது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதாக நம்புகிறேன்.
அதுமட்டுமின்றி கடந்த சில வருடங்களாகவே அவர் சிகிச்சைக்காக வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது உடலில் இரத்தம் நல்ல நிலையில் இருப்பதாகவும், கடந்த சில வருடங்களாகவே எந்த ஒரு மருத்துவ சிகிச்சைக்கும் செல்லவில்லை என கூறும் Stanislava Monstvilene தான் எப்படி சாப்பிடுவேன் என்றும் கூறியுள்ளார்.
மணலுடன் எதையும் சேர்த்து சாப்பிடமாட்டேன், மணல் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க மாட்டேன், தண்ணீருடன் மணலை கலந்து சாப்பிடமாட்டேன், மணல் மட்டுமே சாப்பிடுவேன் என்று கூறியுள்ளார்.