வாழ்க்கையில் ஒரு நாள்கூட இன்பத்தை அனுபவிக்காமல் ஆயிரக்கணக்கானோரை வாழ வைத்தவர்தான் கோவையைச் சேர்ந்த அமுதா.
அமுதா, இரண்டு சகோதரர், இரண்டு சகோதரிகள். நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பிறந்த நாள் முதல் வாழ்வில் இவர் அனுபவித்த துன்பங்களே அதிகம்
பிறந்து சிறிது காலத்திலேயே ஒரு விபத்தில் தலை நரம்பில் அடிபட்டதால், வாழ் நாள் முழுவதும் வலிப்பு நோய் தான்.. பல காலம் மருத்துவமனை தான் இவர்வீடு..
இந்த நோயால் , பள்ளி பக்கமே இவர் போக வில்லை..
இதனிடையே, சொந்த தாய்மாமனுக்கு மணம் முடித்து,கொடுக்க மூன்று வருடத்திலேயே அவர் திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது. அதற்குள் ஒரு அழகான பெண் குழந்தையும் பெற்றெடுத்தார்.
அமுதாவின் பெண்குழந்தையும் பூச்சிக்கடியால் உயிரிழந்துவிட்டது.
அவரது கணவர் வேறு ஒரு பெண்ணை மணமுடித்துக்கொண்டார். இத்துனை துன்பங்களுக்கு இடையே ஒரு பெண் இருந்தால் என்னவாகும்..மன அழுத்தத்தால் அந்த பெண் மிகவும் பாதிக்கபட்டார்..மிகவும் சீரியஸ்ஸாக இருந்தார்
இந்நிலையில், 2015-ம் ஆண்டு, மருத்துவர்களும் அவரை முற்றிலும் கைவிட்டு விட்டனர்.
வீதியில் விட வேண்டிய கட்டத்துக்குத் தள்ளப்பட்டார். அதன் பிறகு தனது குடும்பத்தைப் பிரிந்து, காப்பகத்தில் மூன்று வருடம் இருந்தார்.
அமுதாவின் நிலையைப் பார்த்து, இவரைப் போல உலகில் இனி யாருக்கும் இந்த நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான், அவரது சகோதர, சகோதரிகளால் ஈரநெஞ்சம் என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது
அமுதாவைப் போன்ற ஆயிரக்கணக்கானோர் இந்த அறக்கட்டளை மூலமாக மறுவாழ்வு பெற்று வருகின்றனர்.
ஆனால், அதற்கு காரணமாக அமுதா தற்போது உயிருடன் இல்லை. மாரடைப்பு காரணமாக, கடந்த வாரம் அமுதா உயிரிழந்துவிட்டார்.
அமுதாவைப் போன்ற, மனநிலை பாதிக்கப்பட்ட எத்தனையோ பேர், தன்னிலை மறந்து குடும்பத்தை இழந்தவர்கள், இதன்மூலம் குணமாகி மீண்டும் குடும்பத்துடன் இணைந்துள்ளனர்.
இத்தனைக்கும் காரணமான அந்த அமுதா, தேவதை தானே..!<