இப்போதைக்கு தமிழகம் முழுவதுமே இந்த அமைப்புதான் ரொம்ப பிரபலமானது. பீட்டா இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் பூர்வா ஜோசிபுரா.
இவர் ஒரு அமெரிக்க குடிமகள். இந்திய அனிமெல்ஸ் வெல்ஃபேர் போர்டில் உறுப்பினராகவும் இருக்கிறார்.
அமெரிக்க குடிமகள் ஒருவர் இந்திய அனிமெல்ஸ் வெல்ஃபேர் போர்டில் உறுப்பினராக இருப்பதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது உண்டு.
‘காளைகளுக்கு மது கொடுக்கப்படுகிறது. கூட்டத்திற்கிடையே ஓட விடுவது அவற்றை துன்புறுத்துவது இல்லையா?” என கேள்வி எழுப்பியவர்.
எப்போதும் அமைதியாகவே இருந்த தமிழ்நாட்டில், கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றதை கண்டு நாடே வியந்தது.
அப்போது கருத்து தெரிவித்த பீட்டா இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பூர்வா ஜோசிபுரா ” உங்களால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த முடியாது” என சவால் விட்டார்.
அதனை தொடர்ந்து தை எழுச்சியின் விளைவாக அவசர சட்டம் இயற்றப்பட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது.
மீண்டும் தலைகாட்டிய அவர், ஜல்லிகட்டுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டி வருகிறோம் இந்த வருடமும் தடை வாங்க போகிறோம் என்று கூறி இருந்தார்.
இப்போது, அவனியாபுரம், பாலமேட்டில் முடிந்து அலங்காநல்லூரில் தெறிக்கிறது ஜல்லிக்கட்டு எழுச்சி.
இப்போது முகத்தை வெளிக்காட்ட சொல்லுங்கள் பார்க்கலாம் என்று பூர்வா ஜோசிபுரா புகைப்படத்தை பகிர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்