தமிழ் சினிமாவில் அன்றைய கால கட்டத்தில் மக்கள் மத்தியில் ஒரு நல்ல இடத்தைப் பிடித்தவர் தான் நடிகர் நெப்போலியன்.
இவரது உண்மையான பெயர் குமரேசன் பெரியசாமி. இவர் டிசம்பர் 2ம் திகதி 1963ம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். இவருக்கு ஜெயசுதா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
பட்டப்படிப்பு முடித்து சினிமாவின் மேல் இருந்த ஆர்வத்தினால் சென்னைக்கு வந்த இவர் 1991ம் ஆண்டு பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான புதுநெல் புதுநாத்து என்ற படத்தில் அறிமுகமானார்.
அதன்பின்பு பல வெற்றிப்படங்களைக் கொடுத்த இவர் திமுக-வில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். அக்கட்சியில் இவருக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்தது.
அரசியலில் ஈடுபட்ட நெப்போலியன் ஸ்டாலினுக்கு ரொம்பவே நெருக்கமாகி திமுக தலைமையில் ஒரு பெரிய செல்வாக்கையே பெற்றார்.
இந்நிலையில் தான் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்து, அதன்பின்பு எம்.பி ஆகிய நெப்போலியன் மத்திய இணை அமைச்சராகவும் காணப்படுகிறார்.