சுவிஸ் அரசு மீது பெரும்பாலானோர் அதிருப்தி: கருத்துக்கணிப்பில் தகவல்

சுவிற்சர்லாந்து மக்களில் பாதிக்கும் மேலானோர் அரசாங்கத்தின் மீது அதிருப்தி தெரிவித்துள்ளது Tamedia நிறுவனம் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பில் .

கருத்துக்கணிப்பின் முடிவில் 54 சதவிகிதம்பேர் அரசின்மீது அதிருப்தியையும், 45 சதவிகிதம்பேர் தங்கள் திருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர், 1 சதவிகிதம்பேர் எந்தக்கருத்தும் தெரிவிக்கவில்லை.

கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பின் முதல் பகுதியில், 55 சதவிகிதத்தினர் பாராளுமன்றத்தின் ஃபெடரல் சபைகளின் பணிகள் திருப்திகரமாக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

 

அரசின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே மதிப்பெண்கள் வழங்கியதில், ஒருவர் கூட ஆறுக்கு நான்கு மதிப்பெண்களுக்கு மேல் பெறவில்லை.

அதிகபட்ச மதிப்பெண்களைப் பெற்றவர் Alain Berset, அவர்தான் நாட்டின் தற்போதைய அதிபர்.

இரண்டாவது இடத்தைப் பிடித்தவர், கடந்த ஆண்டு அதிபராக இருந்த Doris Leuthard, அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நிதி அமைச்சர் Ueli Maurer.

3.37 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருப்பவர் பொருளாதாரத்துறை அமைச்சர் Johann Schneider-Ammann.

இந்தக் கருத்துக்கணிப்பு ஜனவரி 4 முதல் 8 வரை 20,000 சுவிற்சர்லாந்து மக்களிடையே நடத்தப்பட்டது.