மரதன் ஓட்டப்போட்டி! இலங்கை பெண் புதிய சாதனை!

அமெரிக்காவில் இடம்பெற்ற ஹுஸ்டன் மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கையின் சாதனை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ஹிருணி விஜேரத்ன என்ற வீராங்கனையே இந்த சாதனையை புதுப்பித்துள்ளார்.

நேற்று முன்தினம் நிறைவடைந்த இந்த போட்டியில் ஹிருணி எட்டாவது போட்டியாளராக நிறைவு செய்தார். போட்டியை நிறைவு செய்ய ஹிருணி 2:36:35 மணி நேரத்தை செலவிட்டுள்ளார்.

முழுமையான அந்த போட்டியில் இருபாலாருக்கும் மத்தியில் இலங்கையின் சார்பில் ஹிருணி 51 வது இடத்தை பிடித்துள்ளார்.

நிலூக்கா ராஜசேகர என்பவரினால் நிகழ்த்தப்பட்ட சாதனையை, இரண்டு வருடங்களின் பின்னர் இலங்கை பெண் ஒருவரினால் புதுப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Captureffg