கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த புகையிரத்தில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தொழிநுட்ப கோளாறு காரணமாக குறித்த தீ விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த புகையிரதம் இன்று நண்பகல் யாழ். மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்திற்கு முன்னர் பயணித்த போது புகையிரதத்தின் பின்பகுதியில் உள்ள இயந்திர பெட்டியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து இன்று அதிகாலை 5.45 மணியளவில் யாழ். நோக்கி புறப்பட்ட அதிவேக சொகுசு புகையிரதத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
தீப்பரவலின் காரணமாக புகையிரதம் சடுதியாக நிறுத்தப்பட்டதுடன், பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, தீயணைப்புப் படையினர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு, தொழிநுட்ப கோளாறு சீராக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளியேற்றப்பட்ட பயணிகள் பேருந்துகளில் அவர்களது இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.