மாத்தறை – அகுரெஸ்ஸ பகுதியில் வேன் வாகனமொன்று மின்கம்பத்தில் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதை தொடர்ந்து வீதியை விட்டு விலகிய வேன் வானகம் அருகில் இருந்து மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
விபத்தில் வாகனத்தில் பயணித்த நபரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளார்.
வேன் வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் , சிகிச்சைக்காக மாத்தறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுவிஸ் நாட்டில் வசிப்பவரும், புங்குடுதீவு பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய செல்லகுமார் என்ற நபரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்தது.
உயிரிழந்த நபர் மற்றும் மேலும் இருவர் கதிர்காமம் யாத்திரை மேற்கொண்டு மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாத்தறை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.