இன்றைய தினம் பத்தரமுல்லையில் பதற்றம்!

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஆட்பதிவு திணைக்களத்திற்கு முன்னால் தேசிய அடையாள அட்டையை ஒரே தினத்தில் பெற்றுக்கொள்ள வந்தவர்கள் மத்தியில் இன்றைய தினம் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Capturevfdgdxஒரே தினத்தில் அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து விட்டு காத்திருந்தவர்களிடம் இன்றைய தினம் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியாது என கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அங்கு பதற்ற நிலமை நிலவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டை தயாரிப்பிற்கான இயந்திரங்களில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான ஒரு நாள் சேவை பாதிப்படைந்துள்ளதாக கடமை நேர அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அடையாள அட்டையினை பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உண்மையில் நாட்டில் இவ்வாறான பிரச்சினைகள் தவிர்க்கமுடியாதது எனினும், இதனை உரிய அதிகாரிகள் முறையான அனுகுமுறைகளின் மூலம் கையாண்டிருக்கலாம்.

அதிகாரிகளின் அனுகுமுறைகளின் மூலம் இவ்வாறான பதற்ற நிலைகள் தவிர்க்கப்படுவது காலத்தின் தேவையாகவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.